பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார்

🕔 March 21, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகரிடம் இன்று புதன்கிழமை பிற்பகல் நாடாளுமன்றில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இந்த பிரேரணையைக் கையளித்தார்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

இவர்களில் 51 உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்தவர்களாவர். 04 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் என அறிய முடிகிறது.

நம்பிக்கையில்லா பிரேரணையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ரி.பி. எக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, சுசந்த புஞ்சி நிலமே மற்றும் காதர் மஸ்தான் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்