தொழிற்சாலையில் வாயு கசிவு; 50 பேர் வைத்தியசாலையில்

🕔 March 20, 2018

ஜாஎல பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணாக, அங்கு பணியிலிருந்த சுமார் 50 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 26 பேர், சம்பவம் நடைபெற்ற நேற்றைய தினம் திங்கட்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 23 பேர் பெண்கள், 03 பேர் ஆண்களாவர். திடீர் சுகயீனமுற்ற இவர்கள் ஜாஎல மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மேலும் 25 பேர் இன்று செவ்வாய்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்