எதிரணிக்கு மாறப் போவதாக, பிரதியமைச்சர் புஞ்சி நிலமே, ஜனாதிபதிக்கு அறிவிப்பு

🕔 March 1, 2018

அரசாங்கத்திலிருந்து எதிரணிக்கு தான் மாறவுள்ளதாக, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதற்காகவே, தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சில மாதங்களுக்கு பொறுத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும், ஆனாலும் தனது முடிவில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

“அண்மையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். அவர்களில் சிலர் என்னை சமாதானப்படுத்த முயற்சித்தனர். என்னுடைய தந்தையின் மரணத்தின் பின்னரும் இந்தக் கட்சியில் நான் இருந்தேன்” எனவும், சுசந்த சுட்டிக்காட்டினார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லை. ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். ஆனால், ஜனாதிபதிக்கு அந்தளவு தெரியாது எனவும் பிரதியமைச்சர் கூறினார்.

Comments