முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் சகோதரர் ஜவ்பர் படுதோல்வி; எதிர்த்து களமிறங்கிய உவைஸ் வென்றார்

🕔 February 10, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் இக்ரஹ் வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் சகோதரர் எம்.எஸ். ஜவ்பர் படுதோல்வியடைந்துள்ளார்.

அட்டாளைச்சேனை இக்ரஹ் வட்டாரத்தில், ஜவ்பரை எதிர்த்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் வெற்றியீட்டியுள்ளார்.

அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்ட முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையையும் அவரின் சகோதரரையும் அட்டாளைச்சேனை   அங்கீகரிக்கவில்லை என்பதை, இந்தத் தேர்தல் மூலம் அங்குள்ள மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு மாகாண அமைச்சராக உதுமாலெப்பை இருந்த காலப்பகுதியில், மிகவும் மோசமான வன்முறையினைப் பிரயோகித்து, அட்டாளைச்சேனையில் அரசியல் செய்திருந்தமையினை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் வெளிப்பாடாகவே, அவருடைய சகோதரர் ஜவ்பருடைய தோல்வியை பார்க்க முடிகிறது.

இதேவேளை, அட்டாளைச்சேனை வட்டாரமொன்றில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் மற்றொரு உறவினரும் படுதோல்வியடைந்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்