மயில் சின்ன வேட்பாளர் மீது அட்டாளைச்சேனையில் தாக்குதல்; தேசிய காங்கிரஸ் வேட்பாளர் காடைத்தனம் புரிந்ததாக பொலிஸில் முறைப்பாடு

🕔 February 9, 2018
– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் தைக்காநகர் வட்டார வேட்பாளர் ஐ.எல்.எம். றபீக் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தைக்காநகர் வேட்பாளர், அவருடைய ஆதரவாளர்கள் சகிதம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் வேட்பாளர் ரபீக்கின் வீடும் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், மயில் சின்னத்தில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரான எஸ்.எம். இக்பால் என்வரும், இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்