எனது கணவர் கோரிக்கை விடுக்கவில்லை; ஊடகச் செய்திகளை மறுக்கிறார் அஞ்சலி அலோசியஸ்

🕔 February 9, 2018

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுன் அலோசியஸ், சிறைச்சாலை வைத்தியசாலையில் அவரை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கவில்லை என்று, அலோசியஸின் மனைவி அஞ்சலி அலோசியஸ் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் அலோசியஸ் அவ்வாறு கோரிக்கை விடுத்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், அர்ஜுன் அலோசியஸ் முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெபேசுவல்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன – தனக்கு ஏற்பட்டுள்ள நாட்பட்ட முதுகு வலிக்கு – சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தொடர்பான செய்தி: விளக்க மறியலிலுள்ள அலோசியஸின் கோரிக்கைகள் நிராகரிப்பு; தலையணை கூட, வெளியிலிருந்து பெற தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்