ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது

🕔 February 4, 2018

 ஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு செல்லும் வழியில், இவர் கைதாகியுள்ளார். இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, உதய வீரதுங்கவின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்து, கோட்டே நீதவான் நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

ரஷ்யாவிலிருந்து 2009ஆம் ஆண்டு இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, பாரிய நிதி மோசடியில் உதய வீரதுங்க ஈடுபட்டார் எனத் தெரிவித்து, அவருக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினைர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், வீரதுங்கவை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை கடந்த ஒக்டோபர் மாதம் பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments