அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிதான் போட்டியிடுவார்: அமைச்சர் யாப்பா உறுதி

🕔 January 17, 2018

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படாததொரு நிலையும், அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படாத ஒரு நிலையும் காணப்படுமாயின், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாகப் போட்டியிடுவார் என்று,  அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என அமைச்சர் கூறியபோது, அவ்வாறு போட்டியிடுவது ஜனாதிபதிக்கு ஒழுக்கமாகுமா என ஊடகவியலாளர்கள் வினவினர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிட்டபோது, தான் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தமையினாலேயே, ஊடகவியலாளர்கள் அவ்வாறு கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்; “இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகப் பொருத்தமானவர், ஜனாதிபதிதான்” என கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்