சட்ட விரோத வானொலி ஒலிரப்பு நிலையம் சுற்றி வளைப்பு; சாதனங்களும் சிக்கின

🕔 January 1, 2018

ட்ட விரோதமாக இயங்கி வந்த வானொலி ஒலிபரப்பு ஒன்றினை, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரணியகல பகுதியில் முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களையும் கைப்பற்றினர்.

மேற்படி சட்ட விரோத ஒலிபரப்பு நிலையம் -நவீன தேடு கருவி மூலம் கண்டு பிடிக்கப்பட்டதாக தொலைத் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பேச்சாளர் கபில எம். கமகே தெரிவித்தார்.

ஒலிபரப்புச் செய்வதற்கான பிரதான கருவி மற்றும் வானொலி ஒலிபரப்புக்கான ஏனைய கருவிகள் இதன் போது, அங்கிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்ழுகுவின், முறையான அனுமதிப்பத்திரமின்றி, இந்த வானொலி நிலையம் இயங்கி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1997ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க தொலைத் தொடர்புகள் சட்டத்தின் பிரகாரம், முறையான அனுமதிப் பத்திரமின்றி வானொலி ஒலிரப்பு நிலையமொன்றினை நடத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதேவேளை, இதற்கு முன்னரும் பல ஒலிபரப்பு நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும், அவற்றினை நடத்தியவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாகவும், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பி.ஆர்.எஸ்.பி. ஜயதிலக கூறினார்.

மேலும், சட்ட விரோத வானொலி ஒலிபரப்புகளை ஒருசில நிமிடங்களில் கண்டு பிடிக்கும் சாதனங்களை, இந்த வருடம் தாம் நிறுவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்