சென்னையிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் சிக்கினார்

🕔 December 28, 2017

ந்தியாவிலிருந்து வந்திறங்கிய நபர் ஒருவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து இன்று காலை 5.42 மணிக்கு யு.எல். 126 எனும் விமானத்தில் வந்த நபரொருவரிடமிருந்தே, மேற்படி போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

கைதானவர் 33 வயதுடைய ஆண் ஒருவராவார். இவரின் பயணப் பையினுள் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகிறது.

212 கிராம் ஹெரோயின் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், அதன் பெறுதி 21 லட்சம் ரூபாய் எனவும், விமான நிலையப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்