வேட்பாளர்களில் 10 வீதமானோருக்கும், வாக்காளர்களில் 03 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை இல்லை

🕔 December 26, 2017

ள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் 10 வீதமான வீட்பாளர்களுக்கு, ஆட் பதிவுத்  திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர் மனுவை நிரப்பும் பொருட்டு, இவர்கள் தமது கடவுச் சீட்டு மற்றும் வேறு அடையாள அட்டைகளையே சமர்ப்பித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாதவர்களும், தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுப்புக்கு இணங்க, தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்களை வைத்திருப்போர், தேர்தலில் வாக்களிக்க முடியும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்