சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம்

🕔 December 24, 2017

லங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 59 வயதுடைய ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர், மரகொல்லியா – தங்கல்ல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

சம்பநம் நிகழ்ந்த கடற்பகுதி ஆபத்தானது என, கரையோரைப் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தும், அந்த இடத்தில் குறித்த பெண் குளித்தமையினாலேயே, இந்த மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

நீண்ட நேர தேடுதலின் பின்னர், குறித்த பெண் சடலமாக மீட்டகப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்