சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாக, மேலும் சிலர் நியமனம்

🕔 December 16, 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் சில தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், இன்று சனிக்கிழமை நியமிக்கப்பட்டனர்.

இந் நியமனங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதற்கிணங்க எம்.எஸ்.எம். சகாவுல்லாஹ், நீர்கொழும்பு தொகுதி இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர்களாக டீ.ஆர். இந்து குணதிலக, எம். நிஹால் மற்றும் விஜயானந்த, ஜீ.கே. உபாலி சந்திரசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஷத்ரிய ராஜபுத்ர வீரசிங்க மற்றும் மஹிந்த பண்டார பக்மீவௌ ஆகியோர் குருணாகல் மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்ட அமைப்பாளராக சந்திரநாத் வீரமன், திகாமடுல்லை மாவட்ட அமைப்பாளராக வை.ஜீ. பந்துல சரத் குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மஹாஓயா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உப தலைவர் கே.டீ. சேனாரத்ன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மஹாஓயா இளைஞர் அமைப்பின் செயற்பாட்டாளரான ஆர்.எம்.சீ.எம். ஞானரத்ன ஆகியோர்,மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து இன்றைய தினம் தமது ஆதரவினை தெரிவித்தனர்.

அமைச்சர் ஜோன் செனவிரத்ன மற்றும் வட மேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்