இன்றைய அரசியல் இறக்கமற்றதாக உள்ளது: காங்கிரஸ் தலைமை பதவியை ஏற்றுக் கொண்ட பின்னர், ராகுல் காந்தி தெரிவிப்பு

🕔 December 16, 2017

ன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்காக அல்லாது மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது என்று, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

அரசியல் என்பது மக்களின் உடைமை. ஆனால், இப்போது அது அப்படியானதாக இல்லை. அதிகார கட்டமைப்பை எப்போது மக்களாகிய நீங்கள் எதிர்க்கத் துணிகறீர்களோ, அப்போது நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவீர்கள். உங்களை பலவீனப்படுத்த அவர்கள் பொய்யுரைப்பர், பிரச்சினைகளை திசை திருப்புவர் எனவும் அவர் கூறினார்.

இந்திய காங்கிரஸ் கட்சியின் 87ஆவது தலைவராக ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டமையை அடுத்து, ஆற்றிய உரையிலேயே, மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிியன் தலைமை பொறுப்பை ஏற்கும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த 06ஆவது நபர் ராகுல் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தனது உரையில் ராகுல் காந்தி மேலும் தெரிவிக்கையில்;

“எங்கள் முன்னால் எத்தகைய சவால் எழுந்தாலும் அதை அன்போடும் பாசத்தோடும் எதிர்கொள்வோம்.

பெரும்பாலான இந்தியர்களைப் போலவே நானும் கொள்கை பிடிப்புடையவனே. ஆனால், இன்று நாம் காணும் அரசியல் களம் நம்மை விரக்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

இன்றைய அரசியல் இரக்கமற்றதாகவும் உண்மையற்றதாகவும் இருக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்காக அல்லாது, மக்களை நசுக்கும் விதத்திலேயே அரசியல் செய்யப்படுகிறது.

அரசியல் என்பது மக்களின் உடைமை. இப்போது அது அப்படியானதாக இல்லை. அதிகார கட்டமைப்பை எப்போது எதிர்க்கத் துணிகிறீர்களோ அப்போது நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவீர்கள். உங்களை பலவீனப்படுத்த பொய்யுரைப்பர், பிரச்சினைகளை திசை திருப்புவர்.

காங்கிரஸ் கட்சி நாட்டை 21ஆம் நூற்றாண்டை நோக்கி முன்னெடுத்துச் சென்றது. ஆனால், நம் பிரதமரோ நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

இங்கே ஒரே ஒருவரின் குரல்தான் அர்த்தமுள்ளது; அந்தக் குரலுக்கு அத்தனை பேரும் கீழ்ப்படியவேண்டும். இப்படித்தான் நாம் இன்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

ஒரு தனிநபரை வலுவானவராக்க தேசத்தின் வெளியுறவு கொள்கைகள் சுக்குநூறாகிக் கிடக்கின்றன.

அவர்கள் காங்கிரஸை பலவீனப்படுத்த விரும்புகிறார்கள். நாம் பின்வாங்கினால் மட்டுமே அது முடியும். அவர்களை எதிர்த்து நில்லுங்கள்.

இந்தியர் ஒவ்வொருவரின் குரலாகவும் நாம் இருப்போம். இந்திய மக்களின் குரலை நசுக்க விடமாட்டோம் என நாம் சூளுரைப்போம். இந்தியர்களின் குரல்களை ஓங்கி ஒலிக்கும் கருவியாக காங்கிரஸ் உருவாக வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்