வண்டால் வந்த வினை; இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா கட்டுப்பாடு; விளக்கமளிக்க பறக்கிறார் நவீன்

🕔 December 16, 2017

லங்கையிலிருந்து தேயிலை இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதென ரஷ்யா எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க ரஷ்யா செல்லவுள்ளார்.

இலங்கையிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த தேயிலையில் வண்டு ஒன்று காணப்பட்டமையினை அடுத்து, இலங்கை தேயிலை இறக்குமதியை கட்டுப்படுத்துவதென ரஷ்யா அறிவித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து விளக்கமளிப்பதற்காகவே பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரஷ்யா செல்லவுள்ளார்.

எவ்வாறாயினும், இது ஓர் அசாதாரண சம்பவமாகும் என்று, இலங்கை தேசிய சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த தேயிலையில் காணப்பட்ட வண்டு, அரிசி போன்ற தானியங்களில் காணப்படுபவை என்றும், தேயிலையில் காணப்படுவதில்லை என்றும் தேயிலை அதிகாரசபை கூறியுள்ளது.

எனவே, தேயிலையை ஏற்றிச் சென்ற கப்பலில் இந்த வண்டு இருந்திருக்கலாம் என்றும் அச்சபை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்