வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கைகலப்பில், அட்டாளைச்சேனை நபர் மரணம்

🕔 December 14, 2017

– அஹமட் –

றக்காமம் – வரிப்பத்தான்சேனையில் இடம்பெற்ற கை கலப்பொன்றின் காரணமாக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபரொருவர் இறந்துள்ளதாக தெரியவருகிறது.

வரிப்பத்தான் சேனையில் இடம்பெற்ற கைகலப்பொன்றில் பாதிக்கப்பட்டமையினாலேயே இவர் மரணமானதாகக் கூறப்படுகிறது.

குறித்த கைகலப்பில் தாக்குதலுக்குள்ளான மேற்படி நபர், அட்டாளைச்சேனையிலுள்ள தனது வீட்டுக்கு வந்த நிலையில், திடீர் சுகயீனமுற்றதாகவும், அதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சம்பவத்தில் பலியானவர் கிழக்கு மாகாண முன்னள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்