தாமரை மொட்டின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறோம்; பசில்

🕔 December 15, 2017

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளுக்கான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுசன பெரமுன சார்பில் வெலிகம, மஹரகம, பாணந்துறை நகர சபைகள், பதுளை பிரதேச சபை, மஹியங்கணை பிரதேச சபை மற்றும் அகலவத்தை பிரதேச சபைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டன.

மஹிந்த ராஜபக்ஷ அணியின் ஶ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சி, நாடு முழுவதும் தாமரை மொட்டுச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்