ஜின்தோட்டயில் இன்று காலை வரை ஊரடங்குச் சட்டம்; நிலமை கட்டுப்பாட்டுக்குள்

🕔 November 18, 2017

காலி – ஜின்தோட்ட பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து அங்கு நேற்றிரவு முதல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வன்முறைகளுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அங்கு நூற்றுக் கணக்கில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு கடமையிலிருந்த அதிரடிப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டமையினைத் தொடர்ந்தே, வன்முறை உருவெடுத்ததாக மக்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், முஸ்லிம் மக்களின் வீடுகள், கடைகள், மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன.

மேலும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்