இடைக்கால அறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று விவாதம்; வெளியே ஆர்ப்பாட்டம்

🕔 October 30, 2017

ரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளும் சூடு பிடித்துள்ளன.

இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியினர், நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால், நாடாளுமன்றத்துக்கான வீதி மூடப்பட்டுள்ளது.

ஆயினும், திட்டமிட்டது போல் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு புதிய அரசியலமைப்பு ஆபத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறி, மஹிந்த தரப்பினர் அதனை எதிர்க்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்