வீட்டுத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் அநீதி; தாய் மண்ணை விட்டு வெளியேற்றவும் முயற்சி: எதிர்ப்புத் தெரிவித்து யாழ் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

🕔 October 26, 2017
– பாறுக் ஷிஹான் –

ரசினால் வழங்கப்படும்  வீடமைப்புத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் தமக்கு  அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில்  மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள், இன்று வியாழக்கிழமை  யாழ் மாவட்ட செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் முஸ்லிம் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 08  மணி முதல் 10  மணிவரை இடம்பெற்றது.

குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு  பல்வேறு காரணங்களை காட்டி, இறுக்கமான நிபந்தனைகளை அரச அதிகாரிகள் விதிப்பதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில்;

“மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடுகள் முஸ்லிம் மக்களுக்காக 2016 டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுவரை அதில் ஒரு வீட்டையாவது குறித்த  மக்களுக்கு வழங்கவில்லை.  2017ம் வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்ற நிலையில் 20க்கும் குறைவானவர்களுக்கே வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்;

எமது தாய் மண்ணிலிருந்து எம்மை வெளியேற்ற சில அதிகாரிகள் முயச்சிக்கின்றனர். மக்களுக்காக வழங்கப்பட்ட 200 வீடுகளும்  முழுமையாக வழங்கப்படல் வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சமாதானமான முறையில்  உயர் அதிகாரிகளுடன் பேசினோம். ஆனால் எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே எமது நிலையை உலகுக்கு எடுத்துச் சொல்வதற்கு இந்த  அமைதியான ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறொம்” எனத் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்