தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

🕔 August 7, 2015

Arrestதேர்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் , இதுவரை 483 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 05 ஆம் திகதி, தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில், 396 பேர் கைதாகியிருந்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட 158 நடவடிக்கைகளின்போது, தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 382 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் வன்முறை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட 197 முறைப்பாடுகளின் அடிப்படையில், 101 நபர்கள் கைது செய்யப்பட்டு, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தேர்தல் வன்முறை தொடர்பில், ஜுலை 17 ஆம் திகதி, 40 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஜுலை 28 ஆம் திகதி 197 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஓகஸ்ட் 03 ஆம் திகதி இந்தத் தொகை 386 ஆக உயர்வடைந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்