ரோஹிங்ய அகதிகளிடம் குழப்பம் விளைவித்த அக்மீமன தேரருக்கு விளக்க மறியல்;

🕔 October 2, 2017

ல்கிசை பகுதியில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டுக்குச் சென்று குழப்பம் விளைவித்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரட்ன தேரரை, எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த இடத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில், வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அக்மீமன தேரர்அழைக்கப்பட்டிருந்தார். இதற்கிணங்க இன்று திங்கட்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அவர்  வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதேவேளை, மேற்படி சம்பவத்துடன் தொடர்புபட்ட 40 வயதுடைய ரவிந்திர வர்மஜித் பெரேரா என்பவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்தமையினை அடுத்து,  இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

அக்கமீமன தேரரும் அவரின் ஆதரவாளர்களும் சம்பவ இடத்தில் நடத்திய கல்வீச்சில் இரண்டு பொலிஸார் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, இந்த விவகாரத்தில் தொடர்புபட்ட 05ஆண்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இனவாதக் காவாலி டான் பிரசாத் என்பவனும் உள்ளடங்குகின்றான்.

இதேவேளை, அந்த சம்பவத்தின்போது வன்முறை நிகழ்வதைத் தடுப்பதற்குத் தவறிய பொலிஸாரிடமும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்