ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல்

🕔 October 1, 2017

ரோஹிங்ய அகதிகளை கல்கிசை பகுதியில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட டான் பிரசாத் எனும் காவாலி உள்ளிட்டோரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கி நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் மேற்பார்வையின் கீழ், ரோஹிங்ய அகதிகள் தங்கியிருந்த வீட்டினை முற்றுகையிட்ட பிக்குகள் உள்ளிட்ட பலர், அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உள்ளிட்ட ஐவரை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்திருந்தனர்.

மேற்படி சந்தேகநபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 09ம் திகதி வரை, குறித்த ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்