எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறைமையின் கீழ் நடைபெறும்: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 September 17, 2017

திர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறையின் கீழ் நடைபெறும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வட மத்திய மாகாண சபை உறுப்பினர்களை, ஜனாதிபதி இல்லத்தில் நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

புதிய அரசியல் கலாசாரமொன்றினை உருவாக்கும் நோக்குடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் – தொகுதி வாரியான தேர்தல் முறையினை அறிமுகப்படுத்துவேன் என, தான் உறுதி வழங்கியிருந்ததாகவும் இதன்போது ஜனாதிபதி மைத்திரி நினைவுபடுத்தினார்.

தற்போதுள்ள விருப்பு வாக்கு தேர்தல் முறைமையானது, அரசியல்வாதிகள் தங்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதற்கு வழியமைத்துள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, புதிய தேர்தல் முறையினூடாக அரசியல்வாதிகளை நாட்டுக்குப் பணியாற்றக் கூடிய வகையில் உற்சாகப்படுத்த முடியும் எனவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்