கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள்; மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பு வரும்

🕔 September 15, 2017

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளமை காரணமாக, கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் மூன்று வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் இறுதியிலும், ஏனைய இரு சபைகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் முதலாம் திகதியுடனும் நிறைவுக்கு வருகின்றன.

இந்த நிலையில், மேற்படி சபைகள் கலைகின்றமையினைத் தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.

எனவே, அடுத்த மாதம் – முதல் வாரமளவில் மேற்படி மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

20ஆவது திருத்த ஏற்பாடுகளின்படி, மேற்படி மூன்று சபைகளின் பதவிக் காலங்களும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பினால், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான முயற்சிகளை அரசாங்கம் கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்