அமைச்சரவைக் கூட்டத்தில் ரவியை காப்பாற்ற களமிறங்கினார் ராஜித; பதில் கொடுத்தார் ஜனாதிபதி

🕔 August 10, 2017

பிணை முறி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவை பாதுகாக்கும் வகையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராஜித சேனாரத்ன உட்பட, ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் பலர் பேசினார்கள் என தெரியவருகிறது.

ரவி கருணாநாயக்க தொடர்பில் இதன்போது பேசிய அமைச்சர ராஜித சேனாரத்ன; “பிணை முறை விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவை விசாரணை செய்வதற்கு எதுவும் இல்லை” என கூறினார்.

சர்ச்சைக்குரிய பிணை முறி பத்திரம் குறித்து விசாரிக்காமல், வாடகை மற்றும் தொலைபேசி கட்டணப் பட்டியல் குறித்து, சட்ட மா அதிபர் திணைக்களம் விசாரணை செய்ததாக, இதன்போது அமைச்சர் ராஜித தனது விமர்சனத்தை வெளியிட்டார்.

ரவி கருணாநாயக்க விவகாரத்தில் சட்ட மா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்த செயற் திறனை, ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளில் காண முடியவில்லை எனவும் இதன்போது அமைச்சர் ராஜித குற்றம் சாட்டினார்.

சட்ட மா அதிபர் தொடர்பில் அமைச்சர் ராஜித இவ்வாறு விமர்சனத்தை முன் வைத்த போது தலையிட்ட ஜனாதிபதி; “பிரதமரின் சிபாரிசுக்கு அமைவாகவே சட்ட மா அதிபர் நியமிக்கப்பட்டார்” எனக் கூறினார்.

எவ்வாறாயினும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ராஜிதவின் கருத்தினை ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த கணிசமான அமைச்சர்கள் ஆதரித்துப் பேசினார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்