சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்த சீனியுடன், 160 கிலோ கொகெயின்; பொலிஸார் கைப்பற்றினர்

🕔 July 19, 2017

தொச நிறுவனத்தின் ரத்மலான களஞ்சியசாலைக்கு, கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் மூலம் கொண்டுவரப்பட்டிருந்த சீனியுடன் 160 கிலோகிராம் கொக்கெயின் போதைப்பொருள் இன்று புதன்கிழமை கைப்பற்றப்பட்டது.

கொள்கலனிலிருந்த சீனியுடன் 10 வித்தியாசமான பொதிகள் காணப்பட்டமையினால், அது தொடர்பில்  கல்கிசைப் பொலிசாருக்கு அறிவித்தாகவும், பின்னர் அந்த கொள்கலனை கல்கிசைப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார்.

இதன்போது, மேற்படி ஒவ்வொரு பார்சலிலும் தலா பதினாறு கிலோ கிராம் எனும் எடையில், மொத்தமாக 160 கிலோ கிராம் கொக்கெயின் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சதொச நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சதொச நிறுவனத்துக்குத் தேவையான சீனியினை, வாரா வாரம் கேள்வி அறிவித்தல் மூலம் கொள்வனவு செய்வதுதான் நடைமுறையாகும். அந்த வகையில் இந்த வாரம் ரஞ்சிதா பிரைவட் லிமிட்டட் நிறுவனம், கேள்வி அறிவித்தலுக்கிணங்க விண்ணப்பித்து, அதில் தெரிவாகியது.

இந்த நிலையில், அந்த நிறுவனத்தினால் கொழும்புத் துறைமுகத்திலிருந்து ரத்மலான களஞ்சியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்த சீனியிலேயே இந்த சந்தேகத்திற்கிடமான பொதிகள் இருப்பதை ஊழியர்கள் கண்டனர்.

இதனையடுத்து,  அங்குள்ள அதிகாரிகளுக்கும் எனக்கும்  இந்த விடயத்தை அறிவித்தனர். அதன் பின்னர், நாங்கள் பொலிஸாருக்கு அறிவித்தோம்” என்றார்.

(கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்