வித்யா விவகாரம்; சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல்

🕔 July 16, 2017

கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின், சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை, குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவி வித்யாவை ஒரு குழுவினர் 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டு பாலியல் வண்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்