சந்தனக் குற்றி கடத்தியவர் கைது

🕔 July 8, 2017

– க. கிஷாந்தன் –

ந்தன கட்டைகளை ஊவா பரணகம பகுதியிலிருந்து வெலிமடை பிரதேசத்திற்கு சட்டவிரோதமாகக் கடத்திய நபர்கள் இருவரை, நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினை அடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, ஊவா பரணகம ஹிம்பிலியகஹமடித்த பகுதியில் வைத்து, சந்தன கட்டைகளையும், கடத்தலுக்காப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வாகனம் மற்றும் சில கருவிகளையும் கைப்பற்றிய பொலிஸார்,  சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

சுமார் ஒரு லட்சம் ரூபாய்கள் பெறுமதியுடைய சந்தன மரக்குற்றிகள் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் சந்தன குற்றிகளுடன் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments