வீதி நிர்மாணத்தில் பெருந்தொகை முறைகேடு; நல்லாட்சியும் சுத்தமில்லை: ஊழல் எதிர்ப்பு முன்னணி

🕔 July 8, 2017

ல்லாட்சி அரசாங்கத்திலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தேசிய இணைப்பாளர் அகலங்க ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

மாத்தறை – மத்தளை அதிவேக வீதியை நிர்மாணிக்கும் பணியிலேயே இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“முன்னைய அரசாங்கத்தின் கீழ், பாதை நிர்மாணத்தின் போது ஒப்பந்தக்காரர்களினால் 40 சதவீதம் மேலதிக செலவீனம் சேர்க்கப்பட்டிருந்தது.

அமைச்சர் கபீர் ஹசீம் அந்த ஒப்பந்தத்தை திருத்தியமைத்து, செலவீனம் குறைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

எனினும். நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள துறைசார் அமைச்சரினால், மீண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு, இருந்த செலவீனத்திற்கும் மேலதிகமான தொகை சேர்க்கப்பட்டுள்ளது” என்றார்

Comments