தேசிய அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள 08 அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு

🕔 July 8, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சில அமைச்சர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 08 அமைச்சர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் எனத் தெரியவருகிறது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் குறித்து, இதன்போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு, சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 18 பேர் தயாராக உள்ளனர் என கூறப்படுகிறது.

மேற்படி 18 பேரில் 08 பேர்தான், நேற்றைய தினம், மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

Comments