வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்கள் சிலவற்றினை மூடிவிடத் தீர்மானித்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக எந்தவிதப் பயன்களுமற்றுக் காணப்படும் தூதரகங்களையே, இவ்வாறு மூடவுள்ளதாக அவர் கூறினார்.
ராஜதந்திர வழிமுறையில் மாற்றங்களை மேற்கொள்ளும், அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இந்த விபரங்களைத் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில இலங்கைத் தூதரகங்களும் இவ்வாறு மூடப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூதரகங்களின் செயற்திறனை மதிப்பீடு செய்தமையின் பின்னரே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீர்மானத்தை தாங்கள் எடுப்பதற்கு முன்னதாக, தூதரகங்களின் தலைமை அதிகாரிகள் செயற் திறனுடன் இயங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



