சம்மாந்துறையில் நடைபெற்ற பெருநாள் தொழுகை
🕔 June 26, 2017



அம்பாறை மாவடடத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை திடல்களிலும் பள்ளிவாசல்களிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
புத்தாடை அணிந்து ஆண்களும் பெண்களும் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் பெருநாள் தொழுகைக்காக வருகை தந்திருந்தனர்.
அந்த வகையில், சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்புப் பெருநாள் தொழுகை சம்மாந்துறை அல் – மர்ஜான் முஸ்லீம் மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
பெருநாள் தொழுகை மற்றும் மார்க்க பிரசாங்கம் ஆகியவற்றினை மௌலவி எம்.எல்.எச்.எம். பஷீர் மதனி நடத்தினார்.
இதன்போது விசேட பிராத்தனையும் இடம்பெற்றது. இதில் பெருமளவிலான ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்.



Comments

