பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கைது; விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவு

🕔 June 23, 2017

னைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவினர் மற்றும் மருதானை பொலிஸார் இணைந்து இவரைக் கைது செய்தனர்.

மருதானையில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர், இவர் கைது செய்யப்பட்டார்.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்தின் போது, சுகாதார அமைச்சின் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, நீதிமன்றில் இவரை ஆஜர் செய்தபோது, ஜுலை 05 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, மன்று உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்