பெருந்தொகை கேளரக் கஞ்சாவுடன் இருவர் கைது

🕔 June 10, 2017

பெருந்தொகையான கேளரக் கஞ்சாவுடன், சந்தேக நபர்கள் இருவரை இலங்கை கரையோரக் காவல்படையின் வடக்கு கட்டளை பிரிவின் அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, 56.5 கிலோகிராம் எடையுடையதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தொண்டமானாறு பகுதியில் வைத்து, கஞ்சாவுடன்  இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக குறித்த கேரள கஞ்சாவை, சந்தேக நபர்கள் கடத்திச் செல்ல முற்பட்டபோது, அவர்களை கரையோர காவல்படையின் கண்காணிப்பு பிரிவினர் பின் தொடர்ந்து கைது செய்துள்ளனர்.

தலா 2.2 கிலோகிராம் எடையுடைய கஞ்சாவை,  25 சிறிய பொதிகளாக நீர் புகாதபடி சுற்றி, இரண்டு கோணிப் பைகளில் வைத்துக் கடத்துவதற்கு, சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அச்சுவேலி மற்றும் தொண்டமானாறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

Comments