கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில்

🕔 June 8, 2017

சிப்பு தயாரித்த பொலிஸ் அதிகாரியொருவர் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில், கசிப்பு மற்றும் கசிப்பு தாயரிக்கும் உபகரணங்கள், ரி-56 ரகத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக ரிவோல்வர் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்தே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனமடு தென்னந்துரியாவ பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற சோதனையினையடுத்து, பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதன்பொது, அந்த வீட்டின் குளியலறையில் இருந்து பத்து போத்தல்கள் கசிப்பு, பரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.

மேலும், வீட்டின் உட்பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட நிலையில், ரி-56 ரக துப்பாக்கியொன்றுடன் சிறிய ரக ரிவோல்வர் ஒன்றும் மீட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்