ஞனாசாரர் தொடர்பில், றிசாட்டின் கேள்வியும், ஜனாதிபதியின் பதிலும்: நேற்று நடந்தது

🕔 June 8, 2017
– எஸ். ஹமீத் –

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்துக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த  நிலைமை  நீடித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால்  மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்துக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் ராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அமைச்சர் ரிசாத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக நன்கு திட்டமிட்ட வகையிலும் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களின் மீது தொடர் தாக்குதல்கள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான  தாக்குதல்களைக்  கட்டுபடுத்துவதற்கு பொலிஸாரால் முடியவில்லை என்றால் ராணுவத்தை களமிறக்கி நிலைமையைக்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்  என ஜனாதிபதி கூறியுள்ளார்.

”பிரபாகரனைப் பிடித்த புலனாய்வுக் குழுவினரால் ஞானசார தேரரைப் பிடிக்க முடியாதா?” என்று, ஜனாதிபதியிடம் நேற்றைய தினம் அமைச்சர் றிசாட் பதியுதீன் நேருக்கு நேர் காட்டமாகக் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்