லண்டன் தாக்குதலில் 07 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

🕔 June 4, 2017

பிரித்தானியாவின் லண்டன் பாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தாக்குதல்களில், 07 பேர் கொல்லப்பட்டதோடு, காயமடைந்த 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட 03 பேரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

பாலத்தில் பயணித்த மக்களை வாகனத்தால் மோதியதொடு, அதன் பின்னர் வாகனத்திலிருந்து வெளியேறிய தாக்குதல்தாரிகள், பரோ சந்தைப் பகுதியில் வைத்து மக்களை கத்தியால் குத்தியுமுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட எதிர் நடவடிக்கையின் போது, பரோ சந்தைப் பகுதியில் வைத்து தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டனர்.

இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறப்படுகிறத.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்