‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார்

🕔 May 30, 2017

“ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’  திரைப்படத்தின் கதை என்னுடையது” என்று ராஜசேகரன் என்பவர், சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில்  புகார் கொடுத்துள்ளார்.

இதனால் ரஜினி, காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை, போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் ராஜசேகரன். இவர், இன்று செவ்வாய்கிழமை சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்படி புகாரிமைன வழங்கியுள்ளார்.

குறித்த புகாரில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ என்ற கரிகாலன் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மூலக்கரு ஆகியவை தன்னுடையது என்றும் அது, திருடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ராஜசேகரன் கூறுகையில்;

“கரிகாலன் எனும் தலைப்பு, திரைப்படத்தின் மூலக்கரு மற்றும் பாடல்கள் ஆகியவை நீதி வழுவாத தமிழ்அரசர் கரிகால் சோழனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்டது. அவர், அந்தக் காலத்தில் நாட்டு மக்களுக்குச் செய்த அறச்செயல், வீரச்செயல் போன்றவற்றை மையப்படுத்தியதாகும். இந்தக் கதையில், நாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து வெளியிடுவதே என்னுடைய லட்சியம்.

இதற்காக, கடந்த 1995 மற்றும் 1996ல் அன்றைய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்திய நாராயணனிடம்  ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்துக்குச் சென்று, கரிகாலன் தலைப்பு மற்றும் கதை பற்றி கூறினேன். மேலும், அவரின் உதவியுடன் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, ‘பிறகு பேசலாம்’ எனச் சொல்லி என்னை புகைப்படம் மட்டும் எடுக்க அனுமதித்தனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்