அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்

🕔 May 30, 2017

மைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நியமனம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாகப் பதவி வகிக்கும் நிலையிலேயே, தயாசிறிக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்