குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல்
🕔 May 21, 2017


குருணாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாககத் தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோல் குண்டுகளை வீசி, இன்று அதிகாலை 03:30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ட போதிலும், அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளது.
தாக்குதலை நடத்தியவர்களில் ஆகக்குறைந்தது 06 பேர் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக பள்ளிவாசலின் கண்ணாடிகள் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

Comments

