பழைய முறைமையில் கிழக்குத் தேர்தல்; பைஸர் முஸ்தபா தெரிவிப்பு

🕔 April 10, 2017

ழைய தேர்தல் முறைமையிலேயே கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள், எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றன.

இந்த நிலையில், அடுத்த வரவு – செலவு திட்டத்துக்குள் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை நடத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை, மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னர், அவற்றுக்கான தேர்தல்களை நடத்தாமல் பிற்போடும் எண்ணம் தனக்கு இல்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அண்மையில் தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத் தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்