ஐம்பது அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 53 பேர் படு காயம்

🕔 April 5, 2017

– க. கிஷாந்தன் –

நாவலப்பிட்டி – குருந்துவத்தை பிரதான வீதியில், செம்ரோக் எனும் இடத்தில் பஸ் வண்டி இன்று புதன்கிழமை மதியம் விபத்துக்குள்ளானதில் 53 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பகுதியிலிருந்து குருந்துவத்தை பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி, வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 53 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, அவர்களில் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபர்த்தில்பாடசாலை மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்