லொறி குடைசாய்ந்து விபத்து; ஒருவர் பலி, ஏழுபேர் காயம்

🕔 April 1, 2017

– க. கிஷாந்தன் –

லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் அதில் பயணஞ் செய்த ஒருவர் பலியானதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

இச் சம்பவம் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆலமரத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிலர், நுவரெலியா ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் லொறி விபத்துக்குள்ளான பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த மூன்று பெண்கள், இதன்போது காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ராகல பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே விபத்துக்குள்ளானது. இதில் லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் ரதல்ல பகுதியை சேர்ந்தவர்களாவர்.

லொறியின் வேகத்தினை கட்டு படுத்த முடியாத நிலையிலேயே, இவ்விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்