தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

🕔 March 28, 2017

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர் என்ற வகையில், தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழகமை இரவு நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.

அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்தக் கலந்துரையாடலின்போதே, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர் என்ற வகையில், ஒருபோதும் தேர்தலை பிற்போடுவதற்கு தான் தயாரில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்