கருவை தாக்க பசில் முயற்சி; ஊடகம் வெளியிட்ட பகீர் செய்தி

🕔 March 17, 2017
ஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் சட்ட மூலத்தினைத்தினை நாடாளுமன்றுக்குக் கொண்டு வர, அப்போதை எதிர்க்கட்சி உறுப்பினர் கரு ஜயசூரிய முயற்சித்த போது, அவரை – அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாக்குவதற்கு முயற்சித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“இது என்ன? இது எதற்கு? நாங்கள் இருக்கும் வரை இதனை சமர்ப்பிக்க விடமாட்டோம்” என கூறியவாறு, கரு ஜயசூரியவை தாக்க பசில் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

நல்லாட்சியில் தகவல் அறியும் சட்டமூலத்தை நிறைவேற்றியமையானது, இலங்கை குடிமக்களின் ஜனநாயகத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று வெற்றியாகும்.

தற்போதைய சபாநாயகர் கருஜயசூரிய மேற்கொண்ட முயற்சிக்குக்கிடைத்த பாரிய வெற்றியாக, தகவல் அறியும் சட்டம் பார்க்கப்படுகிறது.

எனினும் கடந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது, தகவல் அறியும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அது நிராகரிக்கப்பட்டது.

ராஜபக்ஷ அரசாங்கத்தில் இந்த சட்டமூலத்துக்கான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர் கரு ஜயசூரியவை தாக்குவதற்கு முயற்சித்துள்ளார் என ஊடகம் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

“இது என்ன? இது எதற்கு? நாங்கள் இருக்கும் வரை இதனை சமர்ப்பிக்க விடமாட்டோம்” என கூறியவாறு கருஜயசூரியவை தாக்க பசில் முயற்சித்ததாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்