சோமாலியா நிலைவரம்: கப்பலில் பணியாற்றிய இலங்கையர்கள் விடுவிப்பு

🕔 March 17, 2017

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஏரிஸ் 13 கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாம் விடுவிக்கப்பட்டதாக கப்பலில் இருந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த்தப்பட்ட கப்பலை விட்டும் கொள்ளையர்கள்  சென்று விட்டதாகவும்,  விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கப்பலையும் அதில் இருந்தவர்களையும் விடுவிப்பதற்கு கொள்ளையர்கள் கப்பம் கேட்டிருந்தனர்.

இதனையடுத்து, கப்பலைச் சுற்றி வளைத்த சோமாலிய கடற்படையினர் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்​கொண்டிருந்தனர்.

இதனையடுத்தே, கப்பலில் இருந்த இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டதோடு, கடத்திய கப்பலையும் கைவிட்ட நிலையில், கொள்ளையர்கள் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கப்பலானது எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றுடன் ஜனவரி 28 ஆம் திகதி, கொழும்பிலிருந்து புறப்பட்டது.

இந்த நிலையில், சோமாலியா கரையிலிருந்து 30 கிலோமீற்றர் தூரத்தில், இரண்டு சிறு படகுகளில் வந்த கொள்ளையர்கள் கப்பலைக் கைப்பற்றியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்