தலைப்புச் செய்திகள்

நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நான்கு பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது.

சேவை தேவைப்பாட்டின் நிமித்தம் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பரிந்துரைக்கும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துக்கும் அமைவாக இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டவர்களில் மூன்று பொலிஸ் அத்தியட்சகர்களும், ஐந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும் அடங்குவர்.