குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு, நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

🕔 February 9, 2017

Namal - 0865நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், மேலும் ஐந்து நபர்களையும் குற்றத்தடுப்பு பிரிவில் இரண்டு மாதங்களுக்கு முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அந்த வகையில், குறித்த இரண்டு மாதங்களிலும் வருகின்ற இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது.

தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 45 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு பணச்சலவை சட்டத்தை மீறியுள்ளாரென நாமல் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்குடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் நாட்டில் இல்லாத நிலையில், அவர்களை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்