அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் 15 ஆயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிப்பு; ஆனாலும், நல்ல விளைச்சல்

🕔 February 4, 2017

Paddy - 055– முன்ஸிப் அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வரட்சி காரணமாக, பெரும் போகத்தில் 15 ஆயிரத்து 100 ஹெக்டயர் காணிகளில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில், 83 ஆயிரம் ஹெக்டயர் பரப்பளவு காணிகளில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், திருப்திகரமான விளைச்சல் கிடைத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, தமது விளைசலுக்கு சந்தையில் உச்சபட்ச விலை கிடைக்கின்றமை குறித்தும் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும் போகத்தில் 83 ஆயிரம் ஹெக்டயர்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், பெரும் போகத்தில் மழை கிடைக்காமை காரணமாகவும், நீண்ட வரட்சி ஏற்பட்டமையினாலும் 15 ஆயிரத்து 100 ஹெக்டயர் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார். ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் தமண ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே, வரட்சியினால் அதிக நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் கூறினார்.

ஆயினும், வரட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து தப்பித்த நெல் வயல்களில் தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில், அறுவடை செய்யப்படும் நெல் வயல்களிலிருந்து திருப்திகரமான விளைச்சல் கிடைத்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஏக்கருக்கு 35 தொடக்கம் 40 மூடைகள் நெல் கிடைப்பதாகவும் விசாயிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, நெல்லுக்கு சந்தையில் உச்ச விலை கிடைத்து வருகின்றமை குறித்தும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 65 கிலோகிராம் எடையுடைய ஒரு மூடை நெல்லினை, 3150 ரூபா வரையில் விற்பனை செய்ய முடிவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனாலும், இம்முறை அம்பாறை மாவட்டத்தில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட நெற் செய்கையாளர்களுக்கு, அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் நெற் செய்கையில் ஏற்பட்ட பாதிப்புக் குறித்து, தாம் உயர் மட்டத்துக்கு அறிவித்துள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் கலீஸ் மேலும் கூறினார்.Paddy - 17 Paddy - 15 Paddy - 088

Comments

புதிது பேஸ்புக் பக்கம்